ஒரு ஆள் உயரத்துக்கு எழுந்து நின்ற பாம்பு… காண்போரை மிரளவைத்த காட்சி..!

sake-like-look-human-on-mathil

கிங்க் கோப்ரா என்று அழைக்கப்படும் ராஜநாகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு வகை பாம்பு இனமாகும். இது 22 அடி நீளம் வரை வளரும், உலகிலேயே கொடிய நச்சுதன்மை உள்ள விஷம் கொண்ட உயிரினம். இது மனிதர்களை தாக்கினால் ஒரே கடியில் உயிரை கொல்லும் கொடிய விஷம் கொண்டது. பொதுவாக இந்த நாகங்கள் மனிதர்களை தாக்குவது இல்லை. அச்சுறுத்தல் ஏற்படும் போதே தற்காப்பிற்காக படம் எடுத்து தீண்ட முற்படும்.

அடர்ந்த வன பகுதிகளிலே அதிகமாக வாழும் இயல்பு கொண்டது. மற்ற பாம்பினங்களையே உணவாக உட்கொள்ளும். இது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், பச்சை நிறத்திலும், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும் பட்டைகளுடன் காணப்படும். இந்த வகை பாம்பினங்களின் கண்கள் வட்ட வடிவமாக மிக பெரிய கண்களுடன் காணப்படும்.

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், திருநெல்வேலி மாஞ்சோலை பகுதிகளிலும் நீர் நிலை ஒட்டிய பகுதிகளிலும் வாழ்விடத்தை கொண்டிருக்கிறது. வன பகுதிகள் அழிந்து வருவதால் இந்த வகை ராஜ நாகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக கணக்கிடப்படுகிறது. உணவினை வாசனையின் மூலம் அறிந்துக்கொள்கிறது. 300 அடி தூரத்தில் உள்ள இரையினை கூட மிக துல்லியமாக கண்டுபிடித்து உண்ணும்.ஒரு முறை உணவு எடுத்து கொண்ட பிறகு பல நாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழும்.

உணவினை தவிர மற்ற உயிரினங்களை தாக்குவது இல்லை. அச்சுறுத்தல் ஏற்படும் போது எதிரிகளை தாக்குவதற்கு பல அடி தூரம் எழுந்து நின்று படம் எடுத்து மிரட்டும், எதிரியின் சிறு அசைவிற்கு உடனடியாக தாக்கி உயிரை கொல்லும் இயல்புடையது.இந்த பாம்பின் விஷமானது ஆப்பிரிக்க கருப்பு மாம்பா இனங்களை காட்டிலும் 5 மடங்கு அதிகம் விஷம் கொண்டது.

இதனுடைய நஞ்சை முறியடிக்கும் மருந்துகள் தாய்லாந்து நாட்டில் உள்ள செஞ்சிலுவை இயக்கத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்திய ஆராய்ச்சி மையம் சார்பில் கண்டுபிடிக்க பட்டது. இந்த இரண்டு மருந்துகளும் அதிகம் கிடைக்க பெறாததால் பாம்பு கடிதவர்களுக்கு சிகிக்சை மேற்கொள்வது சவாலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக அமைதியான குணம் கொண்ட உயிரினமாக இருக்கும் இந்த வகை பாம்புகள் தொந்தரவு ஏற்படும் போதே படம் எடுத்து மிரட்டும். இங்கேயும் ஒருவர் வம்பிழுக்க …….பாக்குறியா…..பாக்குறியா……என்கிற தொனியில் ஆள் அடி உயரம் படம் எடுத்து மிரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed