இதை தான் மனித நேயம் என்கிறோம்…. சாலையை சுத்தம் செய்யும் வண்டியின் ஓட்டுனர் செய்த செயலை பாருங்க…!


சாலையில் பயணம் மேற்கொள்பவர்கள் நிதானத்துடனும், கவனமாகவும் பயணிக்க வேண்டும். சாலையில் நம்மை போன்று பலரும் பயணம் மேற்கொள்வார்கள். சைக்கிள் முதல் கார்கள், டிரக் போன்ற பெரிய வாகனங்கள் வரை வாகன ஓட்டிகளுடன் உடன் வருபவர்களும் பிராயணத்தை மேற்கொள்வார்கள். சில சமயங்களில் அவசரமாக செல்ல வேண்டி அக்கம்பக்கத்தில் வரும் வாகனங்களை கண்டு கொள்ளாது செல்வார்கள். இப்படி செல்வதால் அவர்களுக்கு மட்டுமின்றி அருகில் அல்லது எதிரில் வரும் சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த அவசர காலத்தில் தன்னுடைய விருப்பத்திற்கே முன்னுரிமை கொடுத்து பயணம் செய்பவர்கள் மத்தியில் சில நல்ல உள்ளங்களும் சக மனிதர்களுக்கும் மரியாதையை கொடுத்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்.

இங்கே காணொலியில் சாலையில் வெப்பத்தை தணிப்பதற்காக தண்ணீர் அடித்து கொண்டு செல்லும் வாகனம் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்து பொருட்களை விற்று கொண்டிருந்த பெண் அருகே சென்றதும் தண்ணீர் அடிப்பதை நிறுத்தி விட்டு அவரை கடந்து சென்றதும் மீண்டும் சாலையில் தண்ணீர் அடித்து கொண்டே சென்றார். இந்த ஓட்டுனரின் செயல் சமூக வலைதளவாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது ….. அந்த வீடியோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..