மழையை ரசிப்பதா, பேத்தியின் குறும்பை ரசிப்பதா.. மழைச்சாரலில் குழந்தையின் செயல்… நெகிழவைக்கும் தாத்தாவின் அன்பு…!.
குழந்தைகளின் உலகம் எப்போதும் புத்துணர்வோடு, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நமக்கு சிறியதாக தெரியும் விஷயங்கள் அவர்களுக்கு பெரிதாக தெரியும், பெரிதாக நமக்கு தெரியும் விஷயங்கள் அவர்களுக்கு சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளோடு ஒன்ற வேண்டும் என்றால் குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறுவது தான் மேலும் அவர்கள் கூறும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது. அவர்கள் ஆசைப்படும் விஷயங்களை பூர்த்தி செய்வது.
இந்த காட்சியில் ஒரு சிறுமி மழையை ரசித்த வாறே மழை நீரை கையில் ஏந்தி அவளது முகத்தை கழுவுகிறாள், தொடர்ந்து அவள் செய்து கொண்டிருக்க தனது தாத்தாவையும் அவ்வாறு செய்யுமாறு கூறுகிறாள். அவர் ஒரு கையை மட்டும் நீட்டுகிறரர். இதை கவனித்த சிறுமி இன்னொரு கையையும் ஏந்தி மழைநீரை பிடித்து முகத்தில் தேய்க்குமாறு வற்புறுத்துகிறாள். தாத்தாவும் இறுதியில் தனது கைகளை நீட்டி மழைநீரை முகத்தில் தேய்கிறார். சிறுமி, தான் மழையை ரசித்து முகத்தில் பூசுவது போன்று தனது தாத்தாவையும் செய்ய சொல்லி மழை நீரில் விளையாடியது சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
குழந்தைகள் தங்களுடன் இருப்பவர்களையும் குழந்தையாக மாற்றுவது வேடிக்கையான ஓன்று. அவர்களின் உலகம் எந்த கவலையுமின்றி மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் உலகம், ஒவ்வொரு விஷயங்களையும் புதியதாகவும், ஆர்வமாகவும் பார்த்து ரசிப்பார்கள்.