இந்த ராசியில் மாப்பிள்ளை கிடைச்சா விட்டுறாதீங்க… மனைவியை மகாராணி மாதிரி பார்த்துக்குவாங்க…!

    இந்தத் தலைமுறையினர் விரும்பி காதல் திருமணம் செய்கின்றனர். ஆனால் சின்ன, சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் கோபப்பட்டு திருமணம் முடிந்த கையோடே விவாகரத்து வரை சென்றுவிடுகின்றனர். விட்டுக்கொடுத்து போகும் தன்மை அவர்களுக்குள் வெகுவாகக் குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். 

     இதுபோன்ற சூழலில் சில ராசிக்காரர்கள் மட்டும் தங்கள் இணையிடம் அதீத அன்பை வெளிப்படுத்துவார்கள். அதில் அவர்கள் கூடுதல் சாமர்த்தியத் தனத்துடனும் இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தங்கள் மனைவிகளை மகா ராணி போன்று வைத்துக் கொள்வார்கள். அவர்கள் இந்த ராசிகளில் எல்லாம் மாப்பிள்ளை வந்தால் மிஸ் செய்யவே கூடாது. அது எந்த ராசி எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

துலாம்

  இவர்கள் தங்களின் அதீத திறமையால் வாழ்க்கைத் துணையை வசீகரிப்பார்கள்.இவர்கள் அன்பிலும், அறிவிலும் கெட்டிக்காரர்கள். தங்களின் வாழ்க்கைத் துணையை எப்போதும் இவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்கள் மகாராணி போல் மனைவியைப் பார்த்துக் கொள்வார்கள்.

ரிஷபம்

  இவர்களும் அப்படித்தான். அதேபோல் இவர்கள் தங்கள் மனைவிக்காக எதையும் செய்வார்கள். பாசம், அக்கறையில் இவர்கள் எப்போதுமே ஒஸ்திதான். இந்த ராசியில் மாப்பிள்ளை வந்தாலும் பெண்கள் நம்பி கழுத்தை நீட்டலாம்.

மீனம்

  எந்த நேரத்திலும் இவர்கள் மனைவியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் பாஸிட்டிவ் திங்கிங் அதிகம் இருக்கும் இவர்களும் மனைவியை, மந்திரி போல் உயர்வாக நடத்துவார்கள்.

மகரம்

    இவர்கள் தங்கள் தலைக்கு மேல் தூக்கிவைத்து மனைவியைக் கொண்டாடுவார்கள். தன் இணையின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் பெரும் பங்கு ஆற்ற்வார்கள். ஆக, இந்த நான்கு ராசியிலும் வரம் வந்தால் பெண்கள் மிஸ் செய்யவே கூடாது.