யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள்…மனதை நோகடிக்காதீர்கள்…வாழ விடுங்கள்…நெப்போலியன் வேண்டுகோள்….!

90’S கால கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். பாரதி ராஜாவால் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நெப்போலியன். நடிப்பில் பிஸியாக இருந்த போதிலும் அரசியலையும் விடவில்லை. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவருடைய மூத்த மகன் பெயர் தனுஷ். தன்னுடைய மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அவர் தனது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பெண் பார்த்து வந்தார். அண்மையில் அவருடைய மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருமணம் விரைவில் ஜப்பானில் நடக்க இருக்கிறது. தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது அதனால் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கப்பலில் சென்று இருக்கிறார்கள். இதற்கிடையில் தனுஷின் திருமணம் குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக பயில் வான் போன்றவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிய போகிறது என்று எல்லாம் பேசிருந்தார்கள்.

இதெற்கெல்லம் பெரிய அளவில் நெப்போலியன் ரியாக்ட் செய்யவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்ட நெப்போலியன் தற்போது ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் அவர் எனது அன்பு நண்பர்களே உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே எங்களது மூத்த மகன் தனுஷின் 8 வருட கனவு. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறோம். இப்போது மறுகோடியான ஜப்பானுக்கு செல்ல 1 வருடமாக திட்டமிட்டு 6 மாதமாக செயல் வடிவம் தீட்டி 1 மாதமாக பயணம் செய்து எனது மகனின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்.

எனது மகனுக்கு இது எல்லை இல்லா மகிழ்ச்சி. எங்களுக்கு இது அளவில்லா மன நிறைவு. இந்த நேரத்தில் நான் உங்கள் முன் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். எங்களுடைய வாழ்க்கையை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள்.
வாழ்க்கை ஒரு முறை தான் வாழ்ந்து பாப்போம். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள். மனதை நோகடிக்காதீர்கள். வாழ விடுங்கள் பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள் இழிவாக பேசாதீர்கள். எண்ணம் போல் தான் வாழ்கை என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.