மாணவர்களோடு மாணவனாக உணவருந்திய குரங்கு… தலைமை ஆசிரியரின் கனிவான கவனிப்பால் குழந்தை போல் பவ்வியமாக அமர்ந்த உணவு உண்ட காட்சிகள்..!

monkey-eat-with-school-student-headmaster-food-feed

பள்ளியில் மாணவ மாணவிகள் மதிய இடைவேளையின் போது உணவு உண்ண ஆரம்பிப்பார்கள்……அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசால் மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. அதனை மாணவர்கள் வரிசையாக நின்று வாங்கி வந்து பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து உணவருந்துவார்கள். மாணவர்கள் உணவருந்தும் போது கீழே சிதறும் உணவு பருக்கைகளை உண்ன காக்கை, மைனா போன்ற பறவைகள் வந்து உண்ணும்.

பொதுவாக குழந்தைகள் உணவு உண்ண அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கென்று சிறப்பு ஆசிரியர்கள் உணவினை ஊட்டி விடுவார்கள். அவர்கள் அவர்களுக்கேற்றவாறு குழந்தைகளின் கவனத்தினை திசை திருப்பி விளையாட்டின் மூலம் உணவினை ஊட்டி விடுவார்கள். ஒரு சில குழந்தைகள் அதையும் மீறி உணவு உண்ண அடம் பிடித்து அழுவார்கள். அப்போது வகுப்பு ஆசிரியர்கள் அன்புடன் உணவினை ஊட்டும் போது குழந்தைகள் கொஞ்சமாவது உணவினை உண்பார்கள்.

பள்ளியில் மாணவர்கள் சிதறிய உணவினை உண்ண காக்கைகள், மைனாக்கள் போன்ற பறவைகள் போன்ற உயிரினங்கள் மட்டும் அல்லாது குரங்கு போன்ற விலங்குகளும் உணவு உண்ண வரும். அதை மெய்ப்பிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொப்பல் தாலுகாவில், ஜப்பலகுடா கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் மாணவர்கள் உணவு இடைவேளையின் போது உணவு அருந்தி கொண்டிருக்க தலைமை ஆசிரியர் இப்ராகிம் மாங்கனி அங்கு வருகை தந்த குரங்கிற்கு அன்புடன் சாப்பாட்டை தன் கையால் ஊட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தலைமை ஆசிரியரின் கனிவான இந்த கவனிப்பை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்.

You may have missed