சபாஷ், சரியான ஜோடி… இப்படி தான் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கனும்.. மணமக்கள் செய்த சிறப்பான சம்பவம்..!

romace_kalyan_jodi_nz

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்….. ஆண், பெண் இரு தரப்பினரும் பொறுப்புடன் செயல்படுவதற்கும் அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்துவதற்கும் வாழ் நாள் முழுவதும் இணை பிரியாமல் உண்மையாக இருப்பதற்கும் திருமணம் செய்து வைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு மணமகன் மற்றும் மணமகள்….இவர்களுடைய வாழ்வில் பொறுப்புகளும், கடமைகளும் அடி எடுத்து வைக்கும். கட்டுப்பாடுகளும் பொறுப்புகளும் அதிகம் இருக்கும் திருமணத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உண்மையான அன்பை வெளிப்படுத்தி வாழ்வில் வரும் இடர்பாடுகளை களைந்து செம்மையாக வாழ்வதற்கு புரிதலும், விட்டு கொடுத்தலும், பொறுமையும் மிக அவசியமான ஓன்று.

ஊரார் முன்னிலையில் நடைபெறும் திருமணம்……. ஊரார் போற்ற வாழ வேண்டும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் அனுபவித்தவர்களின் கூற்றாகும். இதனால் தான் வாழக்கை என்பது அனுபவம் என்கின்றனர். பிரமாண்டமாக நடைபெறும் திருமணத்தை மணமக்கள் தான் உண்மையான புரிதலிலும், விட்டு கொடுத்தலிலும் வாழ்ந்து காட்ட வேண்டும்.

இங்கு ஒரு ஜோடி திருமணம் முடிந்து பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும் போதே அவர்கள் தங்கள் வாழக்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள்….ஒரே மாதிரி எண்ணங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணையின் சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பகிர்ந்து சாப்பிடும் அழகை சமூக வலைத்தளத்தினர் சாப்பிடும்போதே ரொமான்ஸை ஆரம்பித்து விட்டார்கள் என கேலியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You may have missed