படகு கவிழ்ந்திருக்கு என அருகில் சென்று பார்த்த நபர்… அடுத்த சில வினாடிகளில் நடந்த சம்பவம்..!

thimingalam_vid_nz_trends

சமுத்திரம் என்பது வேறு ஒரு உலகம். இந்த உலகத்தில் நீர் வாழ் விலங்குகளும், மீன்களும், பவள பாறைகளும் மற்றும் நமக்கு தெரியாத எண்ணிலடங்கா உயிரினங்களும் கடலில் வாழ்கின்றன. இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். திமிங்கலம் சமுத்திரத்தில் வாழும் மிக பெரிய பாலூட்டி இனத்தை சேர்ந்தது. சமுத்திரத்தின் நடு கடலில் தென்படும், இவை 100 முதல் 200 வருடங்கள் வரை உயிர் வாழும். திமிங்கலங்கள் தங்கள் தலையின் மேற் பரப்பில் உள்ள ப்ளோ கோல் மூலம் சுவாசிக்கின்றன. உலகத்தில் தென்படும் மிக பெரிய உயிரினமாக கருதப்படுகிறது. ஆண் திமிலங்கள் காளைகள் என்றும் பெண் திமிங்கலங்கள் பசுக்கள் என்றும் வழங்கப்படுகிறது. திமிங்கலங்களில் பல வகைகள் உள்ளன, அவற்றில் சில வகை திமிங்கலங்கள் பல மையில் கேட்கும் அளவிற்கு ஒரு விதமான இசை எழுப்பும் இயல்புடையது. அதிசயம் நிறைந்த உயிரினமான திமிங்கலம் மனிதர்களை பிராங்க் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி உள்ளது.

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள் தங்களுக்கு பரிச்சயமான பகுதிகளுக்கு சென்று மீன் பிடிப்பது வழக்கம். செல்லும் போது நடு கடலில் யாரேனும் உதவி வேண்டி காத்திருக்கும் நபருக்கு உதவி செய்வார்கள்.

அப்படித்தான் இந்த காணொலியில் படகு ஓன்று கவிழ்ந்ததாக நினைத்து அருகில் சென்று உதவ முற்படும் போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமிங்கலம் ஓன்று வாயை பிளந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. துரிதமாக செயல்பட்ட படகு ஓட்டுநர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெகு தூரம் சென்றார். திமிங்கலம் நீரில் இருந்து வெளியே வந்து ஒரு டைவ் அடித்தது. உடனடியாக நகர்ந்ததால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து கொண்டனர். இந்த காணொலியை காணும் நமக்கும் ஏதோ படகு கவிழ்ந்ததை போன்ற பிம்பமே ஏற்படுகிறது. கண்ணால் காண்பதும் பொய்…..என்ற பழமொழி நினைவுக்கு வரும். கடைசியில இப்ப திமிங்கலங்களும் பிராங்க் பண்ண ஆரம்பிச்சுடுகளே…. என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed