ஓசில இப்படி கூட பயணம் செய்யலாம் போல.. பேருந்துக்கு பின்னால் இளைஞன் செய்த செயல்..!

   திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். கேரளத்தில் ஒரு இளைஞனின் திறமை அனைவரையும் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்துள்ளது. அப்படி அந்த இளைஞனுக்கு என்ன திறமை இருக்கிறது? எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   இன்றைய இளைஞர்களுக்கு பல திறமைகள் உள்ளன. அவர்களுக்கு சரியான வழிகாட்டி கிடைத்துவிட்டால் ஒலிம்பிக் போட்டிகளில் கூட சாதிப்பார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞர் மிக அழகாக ஸ்கேட்டிங் செய்கிறார். அதிலும் அவர் கிராமப்பகுதியில் வாழும் இளைஞர். அவர் ஊரில் பெரிய ஸ்கேட்டிங் மைதானம் எல்லாம் இல்லை. அவர் ஒரு பஸ்ஸின் பின்பக்கக் கம்பியை பிடித்துக்கொண்டே ஸ்கேட்டிங் முறையில் செல்கிறார். தான் செல்லும் திசையில் இருந்து, பேருந்து வேறு திசையில் செல்ல முயல உடனே பஸ்ஸையே தன் ஸ்கேட்டிங்கால் ஓவர்டேக் செய்து செல்கிறார்.

  இதை பேருந்தின் பின்னால் காரில் வந்த ஒரு குடும்பம் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வெளியிட இந்தக் காட்சி ஒரே நாளில் லட்சக்கணக்காணோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த இளைஞனின் திறமையை ஊக்குவித்து வருகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.