யாரு சாமி நீயு… ரயில் கூட்டம் அதிகமானதால் தலைவன் எங்க போய் ஏறி இருக்காரு பாருங்க..
மனிதர்கள் போக்குவரத்திற்காக அவரவர் தேவைகளுக்கேற்ப பேருந்தையோ, ரெயிலிலோ ,வானூர்தி போன்ற போக்குவரத்து சாதனங்களை அவர்களின் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்து பிரயாணத்தை மேற்கொள்வார்கள்…….
இந்தியாவில் அநேக மக்கள் விரும்பும் மற்றும் பிராயணத்தை எளிதில் மேற்கொள்ளவும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.ஒரு ஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். ரெயில்வே துறையில் 12.54 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தியா முழுக்க 18 ரெயில்வே மண்டலங்கள் இயங்குகின்றன.
இந்தியாவில் தொடர்வண்டி 1853-ல் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் 1947-ல் 42 தொடர் வண்டி அமைப்புகள் இருந்தன. இந்தியாவின் முதலில் ஓடிய பகுதி செங்குன்றம் முதல் சிந்தாதிரி பேட்டை. இது சென்னை மாநகரத்தின் சாலை கட்டுமான பணிக்கான கற்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் 1853-ம் ஆண்டு மும்பைக்கும் தானேவுக்கும் இடையே பயணம் செய்தது. 1880-ல் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய பகுதிகளை இணைத்து. பின்னர் படி படியாக இந்திய ரெயில்வே துறை வளர்ந்து தற்போது சிக்கிம் தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இன்னைக்கும் பாலமாக திகழ்கிறது.
ஏழைகளின் சொகுசு வாகனமான திகழும் ரெயில் ஆசியாவிலேயே மிக பெரியது …..என்றும் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிக பெரிய போக்குவரத்து துறை ஆகும். இவ்வளவு சிறப்பு மிக இந்தியன் இரயில்வே திருவிழாக்காலங்களின் போதும்….. கூட்ட நெரிசலின் போதும்…… மக்கள் பயணம் மேற்கொள்ள சிரமத்தை சந்திக்க வேண்டி வரும். இங்கு ஒருவர் ரெயில் பெட்டிகளை இணைக்கும் பகுதியில் இருந்து கொண்டு கீழே இறங்க மறுக்கிறார். ரெயில்வே அதிகாரி கூறியும் இறங்காமல் அதில் தான் பயணம் செய்வேன் என்று அடம்பிடித்த வட இந்தியர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளார்…..அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…….