பெற்ற பிள்ளையைக் கூட இப்படி கொஞ்சி பார்த்திருக்க மாட்டீங்க.. இந்தம்மா நாயை எப்படி வைச்சுருக்காங்க பாருங்க..!

செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

பாம்பை கடித்துக் கொன்று தானும் இறந்து போன நாய் தொடங்கி, தங்கள் உரிமையாளர்களுக்காக உயிரையே விட்ட பலரைப் பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பில் பூனைக்கு முக்கிய இடம் உண்டு. பூனை அதிகளவில் பலராலும் விரும்பப்படும் செல்லப் பிராணியாக இருக்கிறது. பொசு, பொசுவென பார்க்க அழகாக இருப்பதால் பூனையை பலருக்கும் பிடிக்கும். அதேபோல் பலரும் செல்லப்பிராணி என்றாலே நாய் வளர்ப்புக்குத் தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். காரணம் நாய்கள் அந்த அளவிற்கு அன்பைச் செலுத்துவதுதான்.

இங்கேயும் சிலர் செல்லப் பிராணிகள் வளர்க்கின்றனர். அதிலும் ஒரு பெண் இங்கே நன்றாக வளர்ந்துவிட்ட தன் நாயை ஏதோ பச்சைக் குழந்தையைத் தூக்கி மடியில் வைப்பது போல் தூக்கி இடுப்பில் வைக்கிறார். இதுபோக, இன்னொரு பணக்காரர் தன் வீட்டில் சேவல் வளர்க்கிறார். அந்தச் சேவல் அவரது பெட்ரூமுக்கே போய் அவர் காதருகில் கொக்கரக்கோ என கத்துகிறது. இதோ நீங்களே இந்த அழகிய காட்சிகளைப் பாருங்களேன்.