சைக்கிளில் இருந்து கீழே விழுந்தும் தன்னம்பிக்கையுடன் செய்த செயல்.. உலக அளவில் வைரலான சிறுவன்..!

சிறுவன் ஒருவன் மிதிவண்டியை ஓட்டி செல்லும் போது சாலையில் நிலைதடுமாறி விழும் நிலையில் கீழே விழுந்து சோர்வாகாமல் சட்டன துள்ளி எழுந்து நடனம் ஆடுகிறார். இந்த காட்சி டுவிட்டரில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. இந்த காட்சியை பலரும் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ வாழ்க்கையில் சவால்கள் ஏற்படும் போது இது போன்று தான் சவால்களை கையாள வேண்டும் என்று தலைப்பில் வைரல் ஆகி வருகிறது. இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும், வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் போது உணர்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்தி தன்னை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஒரு வலைதளவாசி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் தமது கருத்தில் இது போன்று தான் அனைவரும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு தம்மை தகுதிப்படுத்த வேண்டும் என்று சிறுவனை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார், ஒரு பார்வையாளர். தற்போது இந்த வீடியோ 10.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது.