தமிழ் பாடலுக்கு பாரம்பர்ய உடையில் செம ஆட்டம் போட்ட கேரள கல்யாணப் பொண்ணு..

   கல்யாண வீடு என்றாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சொந்த, பந்தங்கள் அனைவரையும் அங்கு ஒரு சேர பார்ப்பதே சுகமான அனுபவம் தான். இதனாலேயே சொந்தங்களுக்கு திருமணம் என்றால் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பெட்டிகட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

  அதிலும் கலகலப்பு என்றால் கல்யாண வீடுதான். சந்தோசத்திற்கும், மகிழ்ச்க்கும் பஞ்சம் இருக்காது. வசீகரா படத்தில் வரும் மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல. மீனாட்சி சுந்தரேசா பாடலைப் போல், சொந்தங்களை பார்த்து, பார்த்து ஓடியாடி கல்யாண வேலை செய்வது நம்மையும் அறியாமல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

 அனைத்து வேலைகளையும் செய்வதற்கு தனித்தனியே ஆள்கள் இப்போது கிடைப்பதால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் மணமக்களை அழைத்து எடுக்கும் போட்டோ சூட்கள் ரொம்பவே பேமஸ்.

  இங்கேயும் அப்படித்தான். கேரளத்தில் ஒரு திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்கு வந்தவர்களை மணப்பெண்ணே செம உற்சாகமாக வரவேற்பு டேன்ஸ் ஆடி மகிழ்வித்தார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

You may have missed