பாரம்பர்ய உடையில் மஜா பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஜோடி… என்ன அழகான நடனம் பாருங்க…!

        முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

                         இதேபோல் இப்போது ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமலேயே தமிழ் கலாச்சாரப்படி   பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

  இங்கே ஒரு திருமண ஜோடி விக்ரம், அசின் நடித்த ‘மஜா’ படத்தில் இடம்பெற்ற தைமாசம் பாடலுக்கு தங்கள் வீட்டு மொட்டைமாடியில் நின்றவாறு பாரம்பர்ய உடையில் செம மாஸான ஆட்டம் போடுகிறார்கள். அவர்களின் செம க்யூட்டான அந்த நடனத்தை இதுவரை ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்தக் காட்சி உங்களுக்காக…