நம் நாட்டில் சுலபமாக கிடைக்கும் இந்த காய்க்கு இவ்வளவு மவுசா..? போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்..!

kaai-pala-foriegn-tamil-news

நம்மவர்களுக்கு எப்போதுமே பக்கத்தில் இருப்பதன் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை. அந்த வகையில் இப்போது இந்தக் காயும் உலக அரங்கில் பேமஸ் ஆகிவிடுகிறது. ஆனால் இன்னமும் கூட நம்மவர்கள் அதை ஆச்சர்யம் விலகாமலே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முக்கனிகளில் ஒன்றான பலாவின் காய்க்குத்தான் இப்போது வெளிநாடுகளில் இந்த மவுசு ஏறியிருக்கிறது.காயாக இருக்கும் பலா இறைச்சிபோல் இருப்பதால் இதை வெளிநாட்டினர் விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். கூடவே சாக்லேட், ஐஸ்க்ரீம் செய்யவும் இது பயன்படுகிறதாம். இது துண்டு, துண்டாக வதக்கப்படுவதால் பன்றி இறைச்சிக்கு இணையாக இருக்கிறது. பீட்சாவுக்கு டாபிங்காகவும் இது வெளிநாட்டில் பயன்படுகிறது.

இதுகுறித்து பலாப்பழம் 365 நிறுவனத்தின் நிறுவனர் ஜேம்ஸ் ஜோசப் கூறுகையில், ‘ 30 கிராம் பலாப்பழ மாவில் ஒருகிராம் பெக்டின் உள்ளது. இது இறைச்சிக்கு இணையான சுவையோடு இருப்பதால் இறைச்சியை விரும்பாதோர் இதை உண்கின்றனர்.

இதன்மூலம் பர்கர் முதல் இட்லிவரை உள்ளூர் கிளாகிச் எதையும் செய்யலாம். ரத்தசர்க்கரையை கட்டுப்படுத்துவதில் அரிசி, ரொட்டியைவிட பலாப்பழம் சிறந்தது. கரோனா வைரஸ் தொற்று இறைச்சியை விட பலாவுக்கு டிமாண்டை அதிகரித்துள்ளது.’என்றார்.

You may have missed