நம் ராணுவ வீரர்களின் சாப்பாட்டு நேரம் எப்படி இருக்கும்ன்னு பாருங்க… கிடைப்பதை வைத்து எப்படி வாழலாம் என்பதை இவங்களை பாத்து கத்துக்கலாம்..!

     தன்னைப் பற்றியே யோசிக்காமல் நாட்டைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் யோசிப்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிடலாம். ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் தங்கள் உயிரையே துச்சமாக நினைத்து பணி செய்யாவிட்டால் நாமெல்லாம் நிம்மதியாக கண் தூங்க முடிகிறது.

  எல்லையில் தன் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் களமாடும் ராணுவ வீரர்கள் போர் வரும்போதுதான் சண்டை செய்வார்கள் என்றும், மற்ற நேரங்களில் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள் என்றும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். அவர்களின் பயிற்சிகள் மிகக் கடினமானது. சதா சர்வகாலமும் அவர்கள் அதற்கென மெனக்கெட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  போர் நடக்கிறதோ இல்லையோ, தினம், தினம் அவர்கள் கடுமையான பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் நாமெல்லாம் ரிலாக்ஸ்டாக எப்போது இருப்போம் என்றால் சாப்பிடும் நேரத்தில் தான் இருப்போம்.ஆனால் அவர்களுக்கு ராணுவக் கட்டுப்பாடு அப்போதும் உண்டு. நாம் நன்றாக இருக்க வேண்டும் என பார்டரில் கஷ்டப்படும் எல்லைசாமிகள் இவர்கள்! அவர்களுக்கு உணவு நேரம் கூட யூனிபார்ம் அணிந்து, அலார்ட்டாகவே இருப்பார்கள்.

  அதிலும் நம்மை போல் பேனிலும், ஏசியிலும் அமர்ந்து கொண்டு டைனிங் டேபிளில் சாப்பிடும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடையாது. போகின்ற வழியில் எங்கோ ஒரு இடத்தில் ஒதுங்கி சாப்பிடுவார்கள். ஏதோ சுற்றுலா வந்த வழிபோக்கர்கள் போல் தான் அவர்களின் தினசரி உணவே! இதோ இந்தக் காட்சியில் ராணுவ வீரர்கள் சாப்பிடுவதை நீங்களே பாருங்களேன்.