கபடி விளையாட நாங்களும் வரோம், எங்களையும் சேர்த்துக்கோங்க… கபடி விளையாடிய வீரர்களை தெறித்து ஓட விட்ட மாடுகள்..!

kabadi_fun_vid_nzz

சிறுவயதில் நாம் அனைவரும் பார்த்து ரசித்த விளையாட்டுகளில் ஒன்று கபடி. இதற்கு சடுகுடு என்ற பெயரும் இருக்கிறது. இந்த கபடி விளையாட்டு தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகும்.

மாட்டு பொங்கல் அன்று விளையாடப்படும் ஏறுதழுவுதல் என்ற போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களால் போட்டிக்கு செல்லும் முன்பாக செய்யப்படும் பயிற்சியே கபடி ஆகும்.

மொத்தம் 40 மணி நேரத்தில் விளையாடப்படும் இந்த கபடி விளையாட்டில் ஒரு அணிக்கு 7 பேர் விதம் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவர்.

இந்த வீடியோவில் உள்ள இளைஞர்கள் 4 பேர்கள் இரண்டு பேர் கொண்ட அணியாக பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை சில காளை மாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன. ஒரு இளைஞரை எதிர் அணியில் உள்ள இருவர் சேர்ந்து பிடித்து தள்ளி சகதியில் புரண்டு விழுகிறார்கள்.

இதனை கவனித்த காளை மாடுகள் அந்த இளைஞர்களை துரத்தி சென்று பாதியில் துரத்துவதை விட்டு விடுகின்றன. 4 இளைஞர்கள் விளையாடுவதை வேடிக்கைப் பார்த்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோவானது இணையதள வாசிகளால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

You may have missed