5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. கீழே இருந்து கேட்ச் பிடித்து குழந்தையை காப்பாற்றிய நபர்… வைரலாகும் காட்சி..!

               குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். கிராமப்பகுதிகளில் அதனால் தான்  ஊரும் நிலையில்(தவழ்க்கும்)இருக்கும் பிள்ளை உசுரை எடுக்கும் எனச் சொல்லும் வழக்கமும் இதனால்தான் இருக்கிறது. குழந்தைகள் நாம் கொஞ்சம் கண்ணைத் தப்பினாலும் ஜீட் விட்டுவிட்டு எங்காவது விளையாட ஓடிவிடுவார்கள். குழந்தையை கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

   இங்கேயும் அப்படித்தான். 2 வயது குழந்தை ஒன்று தன் தாயின் பார்வையில் படாமல் வீட்டின் வெளிப்புற ஜன்னல் பக்கம் வந்தது. குழந்தை ஜன்னல் க,மியை பிடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்த கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தவந்த ஷென் டோக் என்னும்  வாலிபர் குழந்தை கீழே விழும் என யூகித்தார். அவர் நினைத்தது போலவே குழந்தை கத்தியவாறே கீழே விழுந்தது. உடனே ஷென் டோக் துரிதமாகச் செயல்பட்டு, ஓடிப்போய் குழந்தையை கேட்ச் பிடித்தார். 

  அவர் மட்டும் இல்லையென்றால் இந்த குழந்தை இன்று உயிருடனே இருந்திருக்காது. ஷென்டோக் நொடிப்பொழுதில் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்டுள்ளார். இதோ அதன் பரபரக்க வைக்கும் சிசிடிவி காட்சியானது ட்விட்டரில் வெளியாகி, வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். 

You may have missed