பணம், சொந்த வீடு ஏதும் இல்லை… ஆனால் சந்தோசம் மட்டும்… நடைபாதையில் குழந்தையுடன் ஆனந்தமாய் தாய் விளையாடிய கட்சியை பாருங்க..!

குழந்தையை தெய்வத்திற்கு இணையாக கருதுவது ஏன் என்றால் குழந்தைகள் கள்ளம், கபடமில்லாத உள்ளம் படைத்தவர்கள். குழந்தைகளுக்கு தாயின் மடியே சொர்க்கம் , தாய் ஊட்டும் உணவே அமிர்தம், அவர்கள் வசிக்கும் இடமே மாளிகை. குழந்தையின் சிரிப்பு முதல் அழுகை வரை அனைத்தும் அழகு தான். குழந்தையின் முதல் சிரிப்பு, முதல் பேச்சு, நடை என குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான். அதே போல் தாயுள்ளத்திற்கு ஈடு இணை இல்லை, தாயை போன்றதொரு கோயிலுமில்லை….தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வார்த்தைகள் மிக பலமிக்கவை. இதனால் தான் பெரியோர்கள் பாடலாக இயற்றியுள்ளனர். எந்த காலத்திற்கும் பொருந்தும் இவை. இந்த பாடலை இயற்றியவர் பூவை.செங்குட்டுவன் ஆவார். தாயின் பெருமையையும், தந்தையின் அருமையையும் உணவுபூர்வமாக் விளக்கும் இந்த பாடல் வரிகள்.

தெய்வம் வேண்டுவோருக்கு வரம் தந்து மகிழ்விக்கும். ஆனால் குழந்தைக்கு என்ன வேண்டும் என்று குழந்தை கேட்காமலே அன்னையானவள் பூர்த்தி செய்வாள். அதனால் தான் தாயை வரம் அளிக்கும் தெய்வத்திற்கு இணையாக வைத்தார்கள்.

சாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு குழந்தைக்கும் கிடையாது, தெய்வத்திற்கும் கிடையாது. இருவருக்கும் அனைத்தும் ஓன்று தான். அன்பு ஒன்றே பிரதானம்.அன்பை பொழிந்தால் மகிழ்ச்சியோடு குழந்தைகள் அனைவரிடமும் பழகுவார்கள்.

நடைபாதையில் குழந்தையுடன் தாய் விளையாடிய காட்சிகள் இணையத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கையில் காசு இல்லை தங்குவதற்கு வீடு இல்லை, சாப்பிட உணவு இல்லை, பாதுகாப்பிற்கு தெய்வம் மட்டுமே துணை என்று வாழும் கை குழந்தையும், தாயும் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக விளையாடும் காட்சிகள் சமூக வலைதளவாசிகளை வியப்படைய வைத்துள்ளது. மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் அந்த காணொலி இதோ…….

You may have missed