பாட்டியோட இந்த குழந்தை மனசை பாருங்க… டிவி சீரியலில் அழுத நடிகைக்கு எப்படி ஆறுதல் சொல்றாங்கன்னு..

grandma-watch-tv-serial-and-get-emotion-viral

பொதுவாகவே பாட்டிகளுக்கு எப்போதுமே வெள்ளந்தி குணமும், அன்பும் அதிகமாக இருக்கும். அவர்களின் உலகமே அலாதியானது, வீட்டில் பாட்டிகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. இங்கேயும் அப்படித்தான் ஒரு பாட்டி இருக்கிறார். அவர் செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்த பாட்டி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?

வீட்டில் டிவியில் தொலைக்காட்சி சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு ஓலைக்குடிசை வீடு. பாட்டி வீட்டில் இப்போதுதான் டிவி வாங்கி வைத்துள்ளனர். முதன் முதலாக பாட்ட்டி வீட்டுக்குள் டிவி வந்துள்ளது. பாட்டி ஆர்வக் கோளாறில் தினமும் சீரியல் பார்த்து வருகிறார். கூடவே, அந்த சீரியலில் மிகவும் ஒன்றிவிட்டார்.

சீரியலில் நடிக்கும் பெண் அழுகின்ற காட்சி வருகிறது. அவர் அழுவதைப் பார்த்த பாட்டி அது டிவியில் வரும் காட்சி என்பதையெல்லாம் தாண்டி ஆறுதல் சொல்கிறார். கூடவே அந்த பெண்ணை யார் ஏமாற்றுகிறார் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார். இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

You may have missed