நாடு சாலையில் விழுந்த மாணவனின் புத்தகபை… சேதமடையாமல் இருக்க இந்த நாய் செஞ்ச அற்புத செயலை பாருங்க..!

god-save-carry-bag-vid-news-trend

நன்றியுள்ள ஜீவனுக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாய்கள் புத்தி சாதுரியமாக செயல்படும். மனிதர்களின் வீட்டு செல்ல பிராணிகளில் முதன்மையானதாக திகழும் நாய்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பும், அக்கறையோடும் பழகும். குழந்தைகள் உள்ள வீடுகளில் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்கும். இரவில் வீட்டின் காவலாளி போல் செயல்படும். அந்நியர் யாரேனும் நுழைந்து விட்டால் ஆக்ரோஷமாக கத்தி அன்னியர்களை பதற வைத்து விடும்.

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மனிதர்களிடம் மிகுந்த அன்போடு உறவாடும். அவர்கள் கற்று தரும் ஒழுக்க பண்புகளை கற்று கொள்ளும். இந்த இடத்தில் தான் சாப்பிட வேண்டும், இந்த இடத்தில் தான் தூங்க வேண்டும் என்று அவற்றை பயிற்சியின் மூலம் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். ஆனால் தெருவில் உலாவரும் நாய்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றி வரும்.

மேலும் அங்குள்ள வீடுகளில் வழங்கப்படும் உணவினை உண்டு வாழும். மேலும் அந்த பகுதிக்கே காவலனாக செயல்படும். இவ்வாறு பொறுப்புள்ள ஜீவ ராசியாக இருக்கும் நாய்களின் குறும்பு தனம் கொண்ட காட்சிகளும், பொறுப்புடன் செயல்படும் காட்சிகளும், இணையத்தில் வைரல் ஆகி மக்கள் மனதில் நிலை பெருவதுண்டு.

இங்கு சாலையின் நடுவில் ஒரு பையானது கேட்பாரற்று கிடக்கிறது.அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதனை சட்டை செய்யாது கடந்து போக சாலையின் ஓரத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நாய் அதனை வாயில் கவ்வி எடுத்து கொண்டு சாலையின் ஓரத்தில் வைக்கிறது. சற்று நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் மாணவர்கள் மூன்று பேர் அதனை தேடி வர சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பையை தூக்கி கொண்டு செல்கின்றனர்.

இதனை அந்த நாய்யானது வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கிறது…….பொறுப்பற்ற மனிதர்கள் வாழும் இந்த உலகில் பொறுப்புடன் நடந்து கொண்ட இந்த நன்றியுள்ள ஜீவனின் செயலை இணையவாசிகள் பலரும் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்……

You may have missed