என்ன தாண்டி வீட்டுக்குள்ள போய்டுவியா… கதவிடுக்கில் இருந்து மாஸ் காட்டிய நாகம்..!

gate-keeper-sanke-viral-news

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இவ்வளவு ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே படங்களில் பாம்பைப் பார்த்து நடுங்குவது போல் காட்சிகள் வைத்திருப்பார்கள்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு வீட்டில் முன்பக்க பலகைக் கதவை பூட்டப் போனார்கள். அபோது அந்தக் கதவு இடுக்கில் ஒரு பாம்பு நின்றது. கதவைப் பூட்டும் போது அந்த பாம்பு மெல்ல வெளியே வந்து நின்றது. இதை அந்த வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் தன் செல்போனில் புகைப்படம் எடுக்க முயல, அந்த பாம்பு பதிலுக்கு படம் எடுத்துக்கொண்டு அவரைக் கொத்த பாய்ந்தது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.

You may have missed