கொரியன் பாடலுக்கு வைப்பாகி தன்னையும் மறந்து ஆடிய கல்லூரி மாணவி… வாயடைத்துபோய் பார்த்த சக மாணவிகள்…!

gangnam-style-collge-girl-vibe-dance

கல்லூரியில் ஆண்டு தோறும் கல்லூரி விழாக்கள் நடைப்பெறும். மாணவர்கள் தங்கள் திறமைகளை மேடையில் அரேங்கேற்றுவார்கள். பேசாற்றால் மிக்க மாணவர்கள் நூலகம் சென்று நிறைய கருத்துள்ள புத்தகங்களை படித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் பயனுள்ள கருத்துக்களை தெரிவித்து பார்வையாளர்களை அசத்தி விடுவார்கள். ஒரு சில மாணவர்கள் நாவல்களில் உள்ள கதைகளை மேடையில் அரங்கேற்றி நிஜ கதாபாத்திரங்களாகவே மாறி நடிப்பில் மெய்சிலிர்க்க வைத்து விடுவார்கள்.

நன்றாக குரல்வளம் மற்றும் சங்கீதம் தெரிந்த மாணவர்கள் தங்கள் பாட்டினால் அனைவரும் ஆச்சர்யம் கொள்ளும் வண்ணம் பாடி ராகத்தில் திளைக்க வைப்பார்கள். தற்போது பல மாணவர்கள் பன்முக திறமைகளுடன் சிறந்து விளங்குகிறார்கள். அந்த வகையில் மாணவர்கள் பிரபலங்களை மிமிக்கிரி செய்து அப்படியே பிரபலங்களை கண் முன் நிறுத்தும் வண்ணம் திறமையால் மாணவர்கள் கவனம் பெற்று வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் மேடை நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்து அசத்தியவர்…இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்று பின்னர் வெள்ளி திரையின் மூலம் பட்டி தொட்டி எங்கும் நடிப்பின் மக்களை கவர்ந்து வருகிறார்.

இன்னும் ஒரு சில மாணவ மாணவிகள் நடனத்தில் மைக்கேல் ஐசக்சனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு நடனத்தை அரேங்கேற்றுவார்கள். கல்லூரி விழாக்களின் போது மற்ற நிகழ்ச்சிகளுக்கு அமைதியுடன் இருக்கும் மாணவ மாணவிகள் நடனம் என்றால் விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்து பார்வையாளர்களாக இருக்கும் மாணவர்களும் நடனம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். இங்கேயும் ஒரு மாணவி கொரியன் பாப் பாடலான ‘கன்னம் ஸ்டார்’ பாடல் ஒலித்ததும் தனியாக அமர்ந்திருத்த அவர் பாடலை கேட்டதும் அவரையும் அறியாது ஸ்டைலாக நடனம் ஆடுகிறார். இவரின் நாடி, நரம்பு, ரத்தம் முழுவதும் நடனம் ஊறி போய் இருக்கும் என்று இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்

You may have missed