நடுவானில் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவார்களா..? பலரும் பார்த்திராத அறிய காணொளி…
ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக பறக்கும் ஜெட், விமானத்தை விடவும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் மிக்கது ஜெட் வகை விமானங்கள். இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும், மேலும் சிலவகை ஜெட் விமானங்களில் ஆறு பயணிகள் வரை பிரயாணம் செய்யலாம். இந்த வகை ஜெட் விமானங்கள் பெரும்பாலும் சரக்குகள், ஏவுகணைகள், குண்டுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சென்சார் போன்ற பொருட்களை ஏற்றி செல்ல பயன்படுத்தபடுகிறது.
ஜெட் வகை விமானங்கள் சரக்கு பொருட்களை ஏற்றி செல்லவும், ராணுவ துறையிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
ஜெட் விமானங்கள் போரின் போது அதிகமாக விமான படையினரால் பயன்படுத்தப்படுகிறது. அப்போது எரிபொருள் தீர்ந்து விட்டால் அதை நிரப்புவதற்காக அவர்கள் தரையிறங்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஏன்னெனில் இந்த வகை விமானங்களுக்கு பறந்த படி ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப கூடிய வசதிகள் இருக்கும். தேவைப்பட்டால் அவர்கள் மற்ற விமானத்திடம் இருந்து ஜெட் விமானத்திற்கு தேவையான எரிபொருட்களை பெற்று கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஜெட் விமானங்கள் போருக்கு ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது.
இங்கும் ஒரு விமானத்திடம் இருந்து ஜெட் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி தான் ஆகாயத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டால் நிரப்புவார்களா என்றும், இது அவதார் படத்தில் வரும் காட்சியை நினைவு படுத்துவதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்…..அந்த காணொலி காட்சியை இங்கே காணலாம்…….
This is how jets refuel in midair. pic.twitter.com/yJR11vfsR5
— Wonder of Science (@wonderofscience) December 31, 2022