பிரிவை தாங்க முடியாமல் பள்ளிக் கூடத்திற்கே சென்ற நாய்… வகுப்பறை முன் செய்த செயலை பாருங்க.. நெகிழவைத்த சம்பவம்..!

dog_see_school_nzz

          செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம். 

  பாம்பை கடித்துக் கொன்று தானும் இறந்து போன நாய் தொடங்கி, தங்கள் உரிமையாளர்களுக்காக உயிரையே விட்ட பல நாய்களை பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. 

பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பில் பூனைக்கு முக்கிய இடம் உண்டு. பூனை அதிகளவில் பலராலும் விரும்பப்படும் செல்லப் பிராணியாக இருக்கிறது. பொசு, பொசுவென பார்க்க அழகாக இருப்பதால் பூனையை பலருக்கும் பிடிக்கும். அதேபோல் பலரும் செல்லப்பிராணி என்றாலே நாய்வளர்ப்புக்குத் தான் பிரதான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். காரணம் நாய்கள் அந்த அளவிற்கு அன்பைச் செலுத்துவதுதான். வீட்டிற்கு காவலாகவும் நாய்களே இருக்கிறது.

       கேரளத்திலும் ஒரு குடும்பத்தினர் செல்லமாக ஒரு நாயை வளர்த்துவந்தனர். அந்த நாய்க்கு 9 மாதங்கள் ஆகிறது. அதை மிகவும் பாசம்காட்டி வளர்த்தனர். கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அந்த நாய் திடீர் எனக் காணாமல் போய்விட்டது. பாப்பியின் உரிமையாளர்கள் அந்த நாயைத் தேடாத இடம் இல்லை. கடைசியில் தங்கள் செல்ல நாயைக் காணவில்லையே என அந்தக் குடும்பமே சோகத்தில் இருந்தது. 

 கோட்டயம் பகுதியில் தான் நாய் வீட்டில் இருந்து மிஸ்ஸானது. பலரும் எங்கெல்லாமோ தேடிக் கிடைக்காத நிலையில் பாப்பியைக் காணவில்லை என குடும்பத்தினர் சோகத்தில் இருக்க, இன்னொருபுறத்தில் பாபியோ தன் குடும்பத்தைத் தேடிக்கொண்டு இருந்திருக்கிறது. ஒருவழியாக 

 கோட்டயம் இன்பெண்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் தன் ஓனரின் மகளைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டது. பள்ளிகே விசிட் அடித்த பாப்பி நாய், வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பாப்பியின் வகுப்பறையின் முன்பே நின்று குரைக்கத் தொடங்கியது. உடனே அந்த மாணவி வெளியே வர மொத்த பள்ளிக்கூடமும் இதில் நெகிழ்ச்சியடைந்துவிட்டது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

You may have missed