சிறுவனிடம் மாலையை போடச்சொன்ன மணமகன்… சிறுவனின் செயலால் மணமகன் வாங்கிய பல்பு.. ஒட்டு மொத்த சொந்தமும் விழுந்து விழுந்து சிரித்த தருணம்…!

கேரளாவில் நடைபெற்ற திருமணத்தில் வரவேற்பின் போது சிறுமி ஒருத்தி மணப்பெண்ணிற்கும், சிறுவன் ஒருவன் மணமகனுக்கும் மாலை அணிவிக்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு அணிவிக்கவேண்டிய மாலையை சிறுவன் ஒருவன் மணமகனுக்கு  அணிவிக்காமல் தனக்கே அணிவித்துக்கொண்டார்.

மணமகன் தனக்கு அணிவிக்கும்படி கூறியதும், மற்றும் மைக்கில் இன்னொருவர் மாலையை தனக்கு அல்ல மணமகனுக்கு அணிவிக்க கோரி கூறியதும் சிறுவன் மணமகனுக்கு மாலை அணிவித்தார்.

 இந்த நிகழ்ச்சியில், மணமகன் சற்று அதிர்ச்சியடைந்து தனக்கு மாலை அணிவிக்குமாறு குனிந்து சிறுவன் முன்பு தலை தாழ்ந்து நின்றுகொண்டிருந்தார். இந்த சிறுவனின் செய்லானது அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த காட்சியானது  வெட்டிங்க்ஹய்லைட்ஸ் 123 யில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை 1. 4மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். 1,லட்சத்து 54 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

You may have missed