உங்க வாழ்க்கையில இப்படி ஒரு இளம் மேக்கப் ஆர்டிஸ்ட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்… என்ன ஒரு அழகு பாருங்க..

cute-makeup-artist-vid-news-kerala

வா….. வா……என் பேரழகே….வாய் பேசும் தாரகையே…… என்ற பாடல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொண்டாட….. பாடும் பாடலாக இருக்கும். சிறுவர் சிறுமியராக இருக்கும் போது அவர்கள் செய்யும் குறும்புகள் ரசிக்க வைப்பதாக இருக்கும். அவர்களின் குறும்பு தனங்கள் தம் பெற்றோர்கள் செய்வதை கவனித்து அதை அவர்கள் பாணியில் செய்து அசர வைப்பது தான்.

சில பெற்றோர்கள் அதை ரசித்து மற்றவர்களும் ரசிப்பதற்காக இணையத்தில் பதிவிடுகின்றனர். 90-ஸ் காலத்தில் எல்லாமே தலை கீழ்……சிறுவர் சிறுமியர் குறும்புகள் செய்தால் பிரம்பால் அடியும் திட்டுமே கிடைக்கும். அதனால் வால் தனம் செய்யும் குழந்தைகளும் வாலை சுருட்டி வைத்து கொள்வார்கள். யார் அவர்களுக்கு செல்லம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே குறும்புகள் செய்வார்கள்.

வெளியில் இறங்கினாலோ மேக்கப் இல்லாமல் பெண்கள் இறங்குவது கிடையாது. அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டுமானாலும் முகத்தில் மேக்கப் க்ரீம்களை தடவி கொண்டு வெளியில் செல்கின்றனர். அதை பார்க்கும் குழந்தைகளும் பெற்றோர்கள் அருகில் இல்லாத சமயங்களில் தங்களுடைய முகத்தை அழகு படுத்தி கொள்வது உண்டு. குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது பூச்சாண்டி வந்துவிடுவான் சாப்பிடு என்று மிரட்டி சாப்பிட கொடுப்பார்கள் …..

90-ஸ் கிட்ஸ்களுக்கு, 2-கே கிட்ஸ்களுக்கு ஸ்மார்ட் போன் மட்டும் போதும் எதை கொடுத்தாலும் அதை பார்த்து கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என தெரியாமலே சாப்பிட்டு விடுகிறார்கள். குழந்தைகள் மட்டும் இல்லாமல், இளைஞர்கள் , பெற்றோர்கள் அனைவரும் அப்படி தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டியை காண்பித்து உணவு ஊட்டிய பெற்றோர் தற்போது இணையத்தில் வரும் குழந்தைகளின் சேட்டைகள் நிறைந்த வீடியோவை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காண்பிக்கலாம்…..

சிறுமி ஒருவர் தம் அம்மா போன்று மேக்கப் செய்து கொள்ள ஆசைப்பட்டு கருப்பு மையை முகம் முழுக்க பூசி கொண்டு தந்தையிடம் காண்பித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…….குழந்தைகளின் குறும்பு தனம் நம்மையும் அறியாது சிரிக்க வைக்கும்…..இந்த கள்ளம் கபட மற்ற சிறுமியின் மேக்கப் கலை இணையவாசிகளை கொள்ளை கொண்டுள்ளது…..வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காணொலி காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…

You may have missed