உன்னோட சகோதரனை பாரு… தாய்மை உணர்வுடன் தன் குட்டியை தூக்கி வந்து தாய் பூனை செஞ்சதை பாருங்க..!

cat_see_child_tobaby

என்னதான் விலங்குகளை நாம் குறைவாக நடத்தினாலும் அவைகளுக்கும் மனிதர்களை போன்று பாசமான குணம் இருக்கத்தான் செய்கிறது.

விலங்குகளும் அதன் குட்டிகளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்கின்றன. அவைகளுக்கும் தாய்மை உணர்வு இருக்கும் என்பதற்கு இந்த வீடியோ காட்சி பதிவு ஓர் உதாரணம்.

இன்றைய வலைதளத்தில் மிகவும் அரிதான காட்சிகள் கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில் ஒரு வீடியோ பார்வையாளர்களின் ஆதரவை பெற்று பல லைக்குகளை அள்ளி வருகிறது அந்த காட்சி உங்களுக்காக இதோ…

வீட்டில் பூனைகளை அதிகம் வளர்க்கிறார்கள், செல்ல பிராணியாக.

அப்படி செல்ல பிராணியாக பூனையை வளர்த்த வீட்டில் உள்ள ஒரு பூனை, அந்த வீட்டின் உரிமையாளரின் குழந்தையை அழகாக தூங்குவதற்கு போட பட்டிருப்பதை பார்க்கிறது. இதனை பார்த்த அந்த பூனையானது தனது குட்டியை தூக்கி கொண்டு வந்து அந்த குழந்தையின் பக்கத்தில் போட்டு தட்டி கொடுக்கும் வீடியோ பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. இதனால் விலங்குகளுக்கும் மனிதர்களை போன்ற தாய்மை கொண்ட உணர்வு இருக்கிறது என்று உறுதியாகிறது.

You may have missed