குழந்தை போலவே செல்லமாக கெஞ்சி கூத்தாடி அடம்பிடித்து அம்மா மடியில் படுக்கும் குட்டியானை…

child-elephant-human-love-mother

கோபம் கொண்ட தாயை சமாதானம் செய்ய குழந்தைகள் கொஞ்சும் புன்னகையால் மனதை கவர்ந்து விடுவார்கள்  அது போல் கோபம் கொண்ட எஜமானரை சமாதானம் செய்ய முயன்ற குட்டி யானையின் செயல் உள்ளதை கவர்ந்துள்ளது…..யானைகள் செய்யும்  செயல்கள், லூட்டிகள் வேடிக்கைகள் இணையத்தில் வைரல் ஆகும்…..யானைகளை கடுப்பேத்தினால் தென்னம்மட்டைகளை கொண்டு தாக்கவும் முற்படும்…….அன்பாக இருந்தால் பிள்ளைகள் போல் கொஞ்சி மடியில் தவழவும் செய்யும்…..

கும்கி படத்தில் வரும் யானை கோபம் கொண்ட கதாநாயகனை சமாதானம் செய்ய அவரின் பின்னால் சென்று கொஞ்சும்…..யானைகள் தங்களிடன் அன்பு காட்டும் மனிதர்களிடம் இத்தனை அன்பு கொள்ளுமா…. என்று வியக்க வைத்தது. யானைகள் மனிதர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும், யானை வளர்ப்பவர்கள் மேல் அதீத பாசம் கொள்ளும். கூட விளையாட வரும் படி அன்பு தொல்லை கொடுக்கும் காணொலி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

உலகில் ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரிதாகவும், காதுகள் பெரிதாகவும். முதுகு தண்டில் சிறிய பள்ளம் போன்ற அமைப்புடன் காணப்படும். ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதால் அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், ஆசிய யானைகள் காடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டு மனிதர்களின் நடவடிக்கைகளால் ஆசிய யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இங்கு யானை ஓன்று மூதாட்டி ஒருவரின் கைகளை பற்றி என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு அவர் கோபத்துடன் இருப்பதை அறிந்ததும் கொஞ்சுகிறது…அவர் இங்கு உட்கார் என்றதும் அந்த மூதாட்டியின் மடியில்மெதுவாக தலை வைத்து படுகின்றது. இந்த செயல் குட்டி யானை மனிதர்களிடம் கொஞ்சி பழகும் விதத்தை பார்த்து சமூக வலைதள வாசிகள் வியப்பில் அதிசயிக்கின்றனர்.அந்த காணொலியை இங்கே காணலாம்……

You may have missed