ரூம் போட்டு யோசிப்பாங்களோ….. இது என்ன புது விதமான விளையாட்டா இருக்கு பாருங்க…!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்கும் நிகழ்வு நடைபெறுவது திருவிழா நாட்களில் தான். திருவிழா நாட்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான போட்டிகள் கிராமங்களில் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஊரே கலை கட்டும். வழக்கமாக ஒவ்வொரு திருவிழாவின் போதும், பண்டிகையின் போதும் வித விதமான விளையாட்டுகளை விளையாடுவார்கள் அதில் குறிப்பாக ஓட்ட பந்தயம், நொட்டியாட்டம், கபடி,வடம் இழுத்தல், சறுக்குமரம் ஏறுதல் போன்ற சுவாரசியமான விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கமான ஓன்றாகும்.
கொரானவிற்கு பிறகு சமீபத்தில் ஓணம் பண்டிகையானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஓணம் அன்று விளையாடும் விளையாட்டுகளில் ஊஞ்சலாட்டம், கிளித்தட்டு,கலகயாட்டம்,நாடன் பந்துகளி, ஓலஞ்சலி, காற்றாடி விடுதல், உறியடி, வடம்வலி போன்ற பாரம்பரியமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள்.
சமூகவலைத்தளத்தில் ஓணம் அன்று இளைஞர்கள் ஓன்று கூடி விளையாடிய புது விதமான விளையாட்டானது ஆற்று கம்பு பாலத்தில் இருவர் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு பையை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கும் விளையாட்டு சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி ஒரு விளையாட்டு யாருக்கும் அறிமுகம் இல்லாத நிலையில் ஆற்றின் மேல்பக்கத்தில் இருந்து விளையாடும் விளையாட்டை அங்கு சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.இது என்ன விளையாட்டா இருக்கும் என்று சமூகவலைத்தளத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.