உங்க வாழ்க்கையில இவ்வளவு பெரிய சமோசாவை பார்த்திருக்க மாட்டீங்க… ஆத்தாடி எவ்வளவு பெருசு..!

சமோசாவைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது. உருளைக்கிழங்கு மசாலாவோடு கூடிய அதன் ருசியும், மணமும் நம்மை சாப்பிடத் தூண்டும். சமோசாவை சின்ன வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள்.

சின்னக் குழந்தைகளுக்கு சமோசா பிடிக்க ஒருவகையில் மோட்டு..பட்லு என்னும் டிவி தொடரும் காரணம். அதில் மோட்டு எப்போதும் சமோசாவுக்கு ஆளாகப் பறப்பதுபோல் காட்சி இருக்கும். இதனாலேயே சின்னக் குழந்தைகளுக்கும் சமோசாவைப் பிடிக்கும். பொதுவாக சமோசா அளவில் சின்னதாகத்தான் இருக்கும்.

ஆனால் இங்கே ஒரு பெண், பார்த்தால் நாமே மிரண்டுவிடும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக பெரிய சைஸ் சமோசா போட்டுள்ளார். அதைப் பார்க்கவே மிகவும் பெரிய சைஸில் இருக்கிறது. கூடவே அந்த சைஸ்க்கு ஏற்றதுபோல் பெரிய சைஸ் பவுலில் இரண்டுவகை சட்னியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சமோசாவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே இவ்வளவு பெரிய சமோசாவா என வாயடைத்துப் போயுள்ளனர்.