“அழகான சின்ன தேவதை…” பாடலை கண்முன் கொண்டு வந்த பெண் நாதஸ்வர கலைஞர்… பெண்ணிற்கே பெருமை சேர்த்த தருணம்..!

amazing-skills-nathaswaram-azhagana-chinna-devathai

இன்றைய பெண்கள் மிகச் சிறந்த திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்-பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கல்யாண வீடு என்றாலே முதலில் நாதஸ்வரம் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும் சட..சடவென அடிக்கப்படும் நாதஸ்வரம் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும். பொதுவாக நாதஸ்வரம் ஊதுவதும் கூட கடினமான உடல் உழைப்புதான்.

இங்கே ஆணுக்குப் பெண்ணிகராக ஒரு பெண்மணி ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கிறார். அதிலும் ஒரு தமிழ் பாடலை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார். அதை நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவேற்றி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி அவருக்கு பாராட்டு மழை பொழிய வைத்துள்ளது. நீங்களே பாருங்க அந்தப் பெண்ணின் திறமையை, நீங்களும் அவர்களை வாழ்த்துங்கள் வீடியோ இணைப்பு கீழே…

You may have missed