புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யாருன்னு தெரியுதா..? இந்த பிரபல நடிகையா வியந்து போன ரசிகர்கள்..!

    பொதுவாகவே பிரபலங்களை சிறுவயது புகைப்படங்களாக பார்ப்பதே அலாதியானதுதான். அது நம்மை வெகுவாகவே ரசிக்க வைக்கும், அந்தவகையில் இங்கேயும் ஒரு குட்டிக் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 

 தமிழ்த்திரையுலகில் தன் நேர்த்தியான நடிப்பால் அதிக ரசிகர்களைக் கொண்டவராக இருந்தார் நடிகை கனிகா. தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு ஜோடியாகவும், தாயாகவும் வரலாறு படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. தொடர்ந்து எதிரி,ஆட்டோகிராப் படங்களிலும் நடித்திருந்த கனிகா மலையாள திரையுலகிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.

     நீண்டகாலம் நடிக்காமல் இருந்துவந்த கனிகா அண்மையில் கடைசியாக ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து செட்டிலாகிவிட்ட கனிகா அவ்வப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.  அடிக்கடி தன் புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

  கடந்த 2008ல் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட கனிகாவுக்கு இப்போது 10  வயதில் ஒரு மகன் உள்ளார். இப்போது அம்மணிக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்னும் ஆசை துளிர்த்துள்ளது. இதற்காகவே அண்மையில்  நடுக்கடலில் நீச்சல் உடையில் ரம்பாவைப் போல் முழுத்தொடையையும் காட்டி செம போஸ் கொடுத்திருந்தார் கனிகா.ஆனாலும் காலம் கனியவில்லை. இப்போது, அம்மணி தன் சின்னவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெடிசன்கள் கனிகா,, சின்ன வயது முகம் அப்படியே இருக்கிறது என கமெண்ட் செய்துவருகின்றனர்.