சைக்கிளில் வந்த அதிர்ஷ்டம்… புல்லட்டில் வந்த துரதிஷ்டம்.. பிரபல நடிகர் பாண்டியன் அவர்கள் வாழ்வின் சோகமான பக்கங்கள்..!


பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான பாண்டியன் ரஜினி, பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்த பாண்டியன் 50 வயதை நெருங்கிய போதே உயிர் இழந்துவிட்டார்.
அவரது வாழ்வில் அதிர்ஷ்டம் சைக்கிளில் வர, துரதிஷ்டமோ புல்லட்டில் வந்து சுருட்டிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நடிகர் பாண்டியன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்தார். ஷீட்டிங்கிற்காக மதுரை வந்த பாரதிராஜாவின் கண்களில் எதேச்சையாக பட்டார் பாண்டியன். உடனே 1983ல் தன் மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அழகான மொழிநடையும், கட்டுமஸ்தான உடல்வாகுபாய் அவர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆண்பாவம், ரஜினி, பிரபுவுடன் குருசிஷ்யன், புதுமைப்பெண் படங்களிலும் நடித்தார். கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து அரசியல் பக்கம் வந்தவர் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார்.

நீண்டகாலமாக மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததை பாண்டியன் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார் பாண்டியன்.