இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஒரு தடவை செஞ்சா மீண்டும் மீண்டும் இப்படி செய்வீங்க..!

மனிதர்களின் இன்றைய நோய் பெருக்கத்துக்கு தாறுமாறான அவர்களின் உணவுக் கலாச்சாரமே காரணம். முந்தைய தலைமுறையின் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் இருந்து இப்போது வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டோம். அப்படி நாம் தவறவிட்ட உணவுகளில் மக்கா சோளமும் உண்டு

சோளத்தில் பார்லி அரிசிக்கு நிகரான சத்துகள் இருக்கிறது. இதில் கோதுமையில் இருக்கும் அனைத்து புரதமும் இருக்கிறது. இது சிறுநீரைப் பெருக்கும் என்பதால் உடலில் உள்ள உப்பையும் எளிதில் கரைத்துவிடும். அதேபோல் இது அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிக்கக்கூடியது. கூடவே கண் குறைபாட்டையும் போக்கும். கூடவே உடலுக்கு, ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு குடல் புற்றுநோய் வராமலும் காக்கும். இரத்ட சக்கரையையும் சம அளவில் வைத்திருக்கும். இரத்தத்தில் கொழுப்பை குறைத்து இதயநோய் அபாயத்தில் இருந்தும் காக்கும்.

இப்போது இந்த மக்கா சோளத்தை எப்படி ருசியான பதார்த்தமாக செய்யலாம் என பார்ப்போம்.

முதலில் ஒரு கடாயில் மூன்று சோளத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு டம்பளர் அளவுக்கு கெட்டியான பால் சேர்க்க வேண்டும். இதனோடு மூன்று டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்க்க வேண்டும். கால் ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து இதை மூடிவைத்து மீடியம் அளவு ஹீட்டில் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் இதை திறந்து பார்க்கலாம்.

இப்போது கேஸை அணைத்துவிட்டு மிதமாக ஆறவைக்க வேண்டும். மிதமான சூட்டிலேயே இதை எடுத்து சோளத்தை தனித்தனியாக கத்தியால் வெட்டி முத்துகளை தனியாக எடுத்துவிடலாம். இந்த முத்துக்களை ஒரு கின்னத்தில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்து சாப்பிட்டாலே நன்றாக இருக்கும். இதோடு அரை ஸ்பூன் அளவுக்கு மிளகாய்தூள் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப ருசியா இருக்கும். செய்முறை வீடியோ கீழே…

You may have missed