வாழை பழத்தோல் face பேக்….இது தெரிந்தால் யாரும் வாழைப்பழ தோலை தூக்கி வீசமாட்டீர்கள்…!

முக்கனிகளில் ஒன்றான வாழை பழம் மனித உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும். இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அனைத்து வகை சீசனிலும் மிக எளிதாக கிடைக்க கூடிய பழம் தான் வாழை பழம். தினமும் ஒரு வாழை பழம் உட்கொண்டு வந்தால் அது உடலுக்கு மிகவும் நல்லது வாழை பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.


மேலும் வாழை பழத்தினை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் என பலர் கூற கேட்டிருப்போம். பழத்தினை சாப்பிட்டுவிட்டு தோலை குப்பையில் போடுவது வழக்கம். வாழை பழத்தை போல் அதன் தோலிலும் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. வாழை பழ தோலில் உள்ள பைட்ரோ நியூட்ரியான்கள் தலையின் முடி முதல் நம்முடைய சருமம் வரை பாத்துகாக்கிறது. அந்த வகையில் வாழை பழத்தோலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.


முதலில் நம்முடைய முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பின்பு வாழை பழ தோலின் உட்பகுதியை முகத்தில் 15-20 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மாரி இளமையாக காட்சியளிப்பீர் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

You may have missed