கின்னஸ் சாதனை புரிந்தார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி.. எதில் தெரியுமா..?

0

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்
இந்தி முன்னணி நடிகரான அமீர்கான் இந்த விருதை சிரஞ்சிவிக்கு கொடுத்து கவுரவித்துள்ளார்.


இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் தெலுங்கு நடிகரான சிரஞ்சிவி. இவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தெலுங்கு சூப்பர்ஸ்டாரான சிரஞ்சிவி 1978 ல் சினிமாவில் அறிமுகம் ஆனவர்.இவர் 45 வருடங்களுக்குள் 156 படங்களில் 537 பாடல்களில் 24000 நடன ஸ்டெப்புக்களை நடனம் ஆடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.


இந்த விருதை ஹிந்தி முன்னணி நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான அமீர்கான் வழங்கி கவுரவித்தார். இதனை பற்றி தெலுங்கு சூப்பர்ஸ்டார் கூறுகையில் நான் கின்னஸ் சாதனை புரிவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை இது எதார்த்தமாக நடந்த ஒன்று நடனத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால் கூட இது நடந்திருக்கலாம் இதற்க்கு என்னுடைய இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் என்னுடைய ரசிக்கர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed