சர்வ சாதாரணமாக பனைமரம் ஏறிய ஆட்டுக்குட்டி… குரங்குக்கே டப் கொடுக்கும் போலையே…!
கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, மைனா, கிளி போன்றவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்து வருவார்கள் கிராமவாசிகள். இந்த வகை விலங்குகள் மனிதர்களுடன் ஒன்றி பழகும். மனிதர்கள் கற்று கொடுக்கும் பழக்கங்களை கடைப்பிடிக்கும்.
இந்த வகை விலங்குகளை மேய்ச்சலுக்கு காட்டு பகுதிக்கு அழைத்து செல்வார்கள். விளை நிலங்களில் மேய்ச்சலுக்கு விடும் போது அங்கு தேவையில்லாமல் வளர்ந்திருக்கும் செடி கொடிகளை உணவாக உட் கொள்ளும். அந்த விலங்குகள் வெளியேற்றும் எச்சங்கள் விளைநிலங்களுக்கு உரமாக மாறும்.
ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு எவ்வளவு தூரம் சென்றாலும் மாலை ஆனதும் வீட்டிற்கு வந்து விடும். ஆடுகளின் பயன்பாடு பெரும்பாலும் பால், இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஆட்டினுடைய பால்…. பால் பொருட்களான நெய், பாலாடை கட்டி செய்வதற்கும், இறைச்சிக்காகவும், தோல் பொருட்கள் செய்வதற்கும், ஆட்டின் முடிகள் ஆடைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் திருவிழாக்களில் கிடா வெட்டி பொங்க சோறு குல தெய்வத்திற்க்கு படைப்பார்கள், கிடாவிற்கு போட்டிகள் நடைபெறுவதும் உண்டு. அதற்காக ஆட்டிற்கு சிறப்பு பயிற்சியளித்து போட்டியில் பங்கு பெறவும், பரிசுகள் வழங்கவும் செய்வார்கள். கிராமங்களில் கிடா விருந்து மிகவும் பிரசித்து பெற்றது. இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படும் விலங்குகளை மனிதர்கள் ஆரோக்கியத்துடன் பாதுகாத்து வருவார்கள்.
சில விலங்குகளுக்கு பயிற்சியளித்து போட்டிகள் மூலம் வெற்றி பெறுவதும் உண்டு. இங்கு ஒரு ஆடு வெகு சாதாரணமாக பனை மரத்தில் சிறுத்தைகள் ஏறுவது போல் ஏறி திரும்பி வருகிறது. பொதுவாக ஆடுகள் மரத்தில் ஏறாமல் கீழிருந்து கால்களால் குதித்து கிளையை பற்றி இலை தலைகளை உண்ணும். ஆனால் இந்த அதிசய ஆடு செங்குத்தாக உள்ள பனை மரத்தில் மலை ஆடு போன்று ஏறி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது……. அந்த காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..