ஆற்றுவெள்ளத்தில் இழுத்து சென்ற குட்டி யானை.. மொத்த யானை குடும்பமே சேர்ந்து மீட்ட நிகழ்வு… என்ன ஒரு பாச போராட்டம் பாருங்க..!
ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கொண்ட குட்டியானையை அதன் குடும்பத்தை சேர்ந்த யானைகள் தண்ணீருக்குள் இறங்கி பத்திரமாக மீட்டுச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.
ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். யானைகளைப் பொறுத்தவரை ரொம்பவும் சாந்தமான மிருகம் தான். அதனால் தான் கோயில்களிலும் யானைகள் வளர்க்கப்படுகிறது .
இங்கே குட்டியானை ஒன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்ற்வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அதனைப் பார்த்ததும் அதேக் குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை யானை இரண்டும் சேர்ந்து ஆற்று தண்ணீருக்குள் இறங்கியது. அந்த குட்டியானையின் இருபுறத்திலும் அரண் போல் நின்று கொண்டு யானையை சமவெளிப்பகுதியில் ஏற்றி விடுகின்றன. யானைகளின் குடும்ப உறவின் மேன்மையைச் சொல்லும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.