அதிக பாரத்தால் ஓட்ட முடியாமல் திணறிய ரிக்சா ஓட்டுநர்… அதை பார்த்து பேருந்து ஓட்டுநர் செஞ்ச செயலை பாருங்க…!

சாலையில் பயணிக்கும் போது நாம் மிகுந்த கவனத்துடன் பயணிப்போம். பேருந்துகள், கனரக வகனங்கள் முதல் மிதி வண்டி வரை மக்கள் சாலைகளில் பயணிப்பார்கள். ஒருவரை ஒருவர் முந்தி செல்வதிலேயே சிலர் குறிக்கோளாக இருப்பார்கள். சிலர் வேண்டும் என்ற மெதுவாகவும், அதே நேரம் அடுத்தவருக்கு வழி விடாமலும் சாலையை முழுதாக ஆக்கிரமித்து கொண்டு செல்வார்கள்.

அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும் பொது மெதுவாகவும், தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது வேகமாகவும் அதே நேரம் கவனமாகவும் பிரயாணிப்பார்கள் . ஹை-வேயில் செல்லும் போது குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்பது இருக்கும். அதுபோல் எதிர் திசையில் பயணம் செய்ய கூடாது என்பது விதியாகும். வழியில் யாரேனும் லிப்ட் கேட்டால் அதற்கு நிறைய பேர் லிப்ட் கொடுப்பது வழக்கம் அது உள்ளூராக இருக்கும் போது. அதே நேரம் வெளியூர் சென்றால் சற்று யோசனைக்கு பிறகே ஆலோசித்து லிப்ட் கொடுப்பார்கள்.

இங்கே காணொலியில் பேருந்து ஓன்று மூன்று சக்கர வாகனத்திற்கு லிப்ட் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு பேருந்து முந்தி செல்வதற்காக இப்படி செல்கிறது என்று தோன்றும். ஆனால் மூன்று சக்கர வாகனத்தை வெயிலில் கால்களால் மிதித்து வருவதால் மனித நேயமிக்க அந்த ஓட்டுநர் அவரது மூன்று சக்கர வாகனத்தை இவரது பேருந்தில் ஒட்டியவாறு அவரது வாகனத்தை தள்ளி செல்கிறார். இப்படியும் சில நல்ல மனிதர்கள் தங்களால் இயலாதவருக்கு உதவ முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

You may have missed