இயற்கையின் இந்த அழகிய தருணத்தை பாருங்க.. போராடுபவர்களுக்கே வெற்றி…. என்றுணர்த்திய சிறிய பறவையின் முயற்சி…!
முட்டைக்குள்ள இருக்கும் போது என்ன தான் சொல்லிச்சான் கோழிகுஞ்சு என்ற கிராமிய பாடல் அனைவருக்கும் தெரிந்ததே……உலகத்தை பார்க்க போகிறேன் என்ற ஆசையில் முயற்சி செய்து வெளியே வரும்.
பறவையினங்கள் பொதுவாக முட்டையிட்டு அடைகாத்து புதிய தலைமுறையை தோற்றுவிக்கும். முட்டையில் இருந்து வெளியே வருவதற்கு அந்த சிறிய பறவை கூடுதல் முயற்சி எடுத்த பின்னரே வெளியே வரும். வெளியே வந்த பின்னர் தாய் பறவை அரவணைத்து பாதுகாப்பு கொடுக்கும். குஞ்சுகள் அனைத்தும் முட்டையில் இருந்து வெளியே வந்த பின்னர் உணவு உண்பதற்கு கற்று கொடுக்கும்.
ஒவ்வொரு பறவையினங்களும் அடைகாக்கும் காலஅளவு வேறுபடும். மேலும் ஒன்றோ அல்லது இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும்.
பெரும்பாலும் தாய் பறவைகளே அடைகாக்கும். அப்போது உணவு தேடி வெளியே செல்லாது. முட்டைக்கு தேவையான சூடு இருந்தால் மட்டுமே குஞ்சுகள் அதன் கால அளவில் வெளியே வரும். இதனால் ஆண் பறவைகள் பெண் பறவைக்கு தேவையான உணவினை கொண்டு சேர்க்கும். இந்த காணொலியில் முட்டையில் இருந்து வெளியே வருவதற்கு அந்த சிறிய பறவை எடுக்கும் முயற்சி மனிதர்களுக்கு பாடமாகவும் தங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு உந்துகோலாக வும் அமையும்.