ஆப்பிரிக்க சிறுவர்களின் வேற லெவல் டேன்ஸ் திறமை.. இந்த பசங்கள மாறி யாராலயும் ஆட முடியாது..!
களம், கபடமே இல்லாத பருவம் எது எனக் கேட்டால் அனைவருமே நம் சிறுவர், சிறுமிகளாக இருந்த பருவத்தைத்தா சொல்லுவோம். இங்கேயும் அப்படித்தான் சில சிறுவர்கள் அந்த வயதுக்கு மீறிய செய்கையால் கவனம் பெற்றுள்ளது. அதிலும் பலரையும் அவர்களது திறமையே மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் சிறுவர்களின் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அப்படி அந்த சிறுவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? அவர்கள் நம் நாட்டுச் சிறுவர்களும் அல்ல. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பொடியர்கள்.
முறைப்படி நடனமெல்லாம் கற்றுக்கொள்ளாத சிறுவர்கள் அவர்கள். அந்தப் பொடியர்கள் இயல்பாகவே வீட்டில் டிவி ஓடுவதைப் பார்த்தே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குழுவாகச் சேர்ந்து அருமையான இசைக்கு ஆப்பிரிக்க நாட்டு ஸ்டைலில் செம மாஸாக, வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு நடனம் ஆடுகிறார்கள். அதிலும் பாடல் தொடங்கும் முன்பு தங்கள் இருகைகளையும் தரையில் ஊன்றி, காலை மேலே தூக்கி செம மாஸாக ஓப்பனிங் நடனம் ஆடுகிறார்கள்.
இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் இவ்வளவு அருமையாக வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு ஆடுகிறார்களே எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.இந்தப் பொடியர்களின் இந்த நடனத் திறமைக்கு ஏற்ப, அவர்களுக்கு உரிய பயிற்சி கிடைத்தால் வாழ்வில் நிச்சயம் உயர்ந்த இடத்திற்குச் செல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். நிச்சயம் உங்களுக்கும் இவர்களது திறமை ஆச்சர்யமூட்டும்.