இவருதான் ரியல் பாகுபலி… 250கிலோக்கு மேல் உள்ள மரத்தடியை கீரை கட்டு போல் தூக்கி சென்ற வீரர்…!
சமீபத்தில் கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட பண்டிகை ஓணம். பத்து நாட்களும் ஒவ்வொரு வீடுகளிலும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்பதற்காக விரதம் இருந்து தங்களுடைய மன்னரை பத்தாவது நாளன்று புத்தாடை அணிந்து தடபுடலாக வித விதமாக சமைத்து மகாபலி சக்ரவர்த்தியை வர வேற்பார்கள். எந்த வித ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து வீடுகளிலும் மன்னன் எழுந்தருளுவார் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக வரவேற்பார்கள்.
அன்றய தினம் மாநிலம் முழுவதும் அனைவரும் ஓன்று கூடி விளையாட்டுகள்,ஆட்டம் பாட்டம் என தங்களுடைய பாரம்பரியமிக்க விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள்.அப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொவரும் வித விதமாக விளையாட இங்கு ஒருவர் விளையாட்டில் நிஜ பாகுபலியாக அவதாரம் எடுத்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் சுமார் 300 கிலோ எடை கொண்ட மரத்தினை தூக்கும் போட்டி நடைபெற்றது.அதில் ஒரு சில பேர் பங்கு பெற்றாலும் பிரகதீஷ் என்ற இளைஞர் மட்டும் அசராமல் 300 கிலோ எடை கொண்டமரத்தினை லாவகமாக தூக்கி 73 மீட்டர் தூக்கி சென்றுள்ளார். அவர் தூக்கி செல்லும் போது அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை கை தட்டி உற்சாக படுத்தினர். மேலும் இதனை அங்கு இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பகிர்த்துள்ளார்கள்.சமூக வலைதளவாசிகளும் இவர் தான் உண்மையான பாகுபலி என்று கொண்டாடிவருகின்றனர். இப்போது இவர் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்க் ஆகியுள்ளார்.