இந்த சிறுவனின் வாழ்க்கையைப் பாருங்கள்… எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் அவருக்கு…!

பொதுவாக குழந்தைப்பருவம் என்பது வீட்டின் கஷ்ட, நஷ்டங்களே தெரியாத மிகவும் சந்தோஷமான பருவம். இந்தக் காலத்தில் மனம் எந்த சங்கடத்திற்கும் இடம் தராமல் மகிழ்ச்சியாக கழியும். இங்கேயும் ஒரு குட்டிப் பையனின் சந்தோச தருணம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

அப்படி அந்தப் பொடியன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? அந்த சிறுவனின் குடும்பமே மிகவும் பாவம். அவர்கள் வாழ்க்கையே சாலையோரம் தான் அமைந்துள்ளது. அதிலும் போலீஸார் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் பேரிகார்டு எனப்படும் தடுப்பு வேலிக்குள் தான் அந்த சிறுவனின் குடும்பமே வசிக்கிறது. அந்த பேரிகாரின் மேல் பகுதியில் தான் அவர்களின் துணிமணிகளையே துவைத்து காய வைத்திருக்கின்றனர். அந்த பேரிகார்டை சுற்றி வரிசையாக டூவீலர்களும், கார்களும் போய்க்கொண்டே இருக்கின்றன.

அந்த பேரிகார்டிலேயே துணியில் ஊஞ்சல் கட்டி முகம் நிரம்ப சந்தோசத்துடன் உற்சாகமாக ஆடுகிறான் அந்தப் பொடியன். அந்த சிறுவன் ஊஞ்சல் ஆடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சிறுவனின் இந்த ஊஞ்சல் காட்சி இணையத்தில் அதிகம் பேரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன். இந்த புன்னகைக்கு விலையே கிடையாது எனச் சொல்வீர்கள்!…