நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட வாத்து மற்றும் நாய்… மனிதர்களை போல் கட்டி பிடித்து எப்படி அன்பை பறிமாறுகின்றது பாருங்க…!

பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான். நாம் பொதுவாகவே மனிதர்கள் தான் நட்பு விசயத்தில் மிகவும் அருமையாக இருப்பார்கள் என நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் நட்பில் மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் வித்தியாசமே இல்லை என நினைக்கும் அளவுக்கு இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி, என்ன நடந்தது? எனக் கேட்கிறீர்கள். ஒரு எஜமானர் தன் வீட்டில் ஒரு நாயும், வாத்தும் வளர்த்து வந்தார். இந்த இரண்டு பிராணிகளும் சேர்ந்தே வளர்ந்து வந்தன. இந்நிலையில் தன் வீட்டுத் தோட்டத்தின் பாதுகாப்பிற்காக அந்த எஜமானார் நாயை கூட்டிப் போய் விட்டார். இதனால் நாயும், வாத்தும் சந்தித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தோட்டத்தில் நடந்துவந்த பராமரிப்பு வேலைகள் முடிந்த நிலையில் நாயை அழைத்து வந்து மீண்டும் தன் வீட்டிலேயே விட்டார்.

இந்நிலையில் சில நாள்களுக்குப் பின் ஒருவரை, ஒருவர் சந்தித்துக்கொண்ட நாயும், வாத்தும் பாசத்தோடு ஓடி வந்தன. நீண்ட இடைவெளிக்குப் பின், சந்தித்துக் கொண்ட நண்பர்கள் போல இருவரும் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டனர். தொடர்ந்து இந்த நண்பர்கள் தங்களுக்குள் கொஞ்சி விளையாடிய காட்சி இருக்கிறதே…அடேங்கப்பா..பார்க்கவே அத்தனை ரசனையாக இருக்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்..

You may have missed