இந்த மனுஷனுக்கு உடம்பெல்லாம் மூளை போலயே.. நீங்களே பாருங்க..!

          என்ன தான் பட்டப் படிப்பெல்லாம் படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், சில நேரங்களில் பாமர மக்களின் விஞ்ஞான அறிவில் அவர்களே கூட சொக்கிப் போவார்கள். அப்படியான ஒரு கேரள மாநிலத்தைச் சேர்ந்த  வில்லேஜ்விஞ்ஞானியின் சூப்பர், டூப்பர் கண்டுபிடிப்பு உலக அளவில் வைரலாகி வருகிறது.

  அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் என்கிறீர்களா? கேரளத்தில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழையினால் கடந்த வாரத்தில் மட்டும் ஆறுபேர் கேரளத்தில் உயிர் இழந்தனர். இதுமட்டும் இல்லாமல் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர ஏனைய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

  கனமழையினால் பலரது வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இங்கேயும் அப்படித்தான். ஒரு முதியவரின் வீட்டைச் சுற்றி தண்ணீர் இருந்தது. அவர் வெளியே சென்றுவர தன் கால், துணிகள் நனையாமல் இருக்க ஒரு நூதனமுறையைப் பின்பற்றுகிறார். மேட்டர் சிம்பிள் தான். தன் வீட்டில் இருக்கும் இரு சேர்களை ஒன்றாக சேர்த்துக்கட்டி, அதை கயிறால் கட்டியிருக்கிறார். அதை தூக்கி, நகர்த்திக்கொண்டே சென்று அதன் மேல் நின்றபடி செல்கிறார். ஒரு சேரில் இருகால்களையும் வைத்து நிற்கும் போதே அடுத்தச் சேரைப் போட்டு அதில் ஏறிக்கொள்கின்றார். மீண்டும் முதலில் நின்ற சேரை முன்னால் தூக்கிவைத்து அடுத்த ஸ்டெப்பை எடுத்துவைக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.        

You may have missed