இயற்கையின் அதிசயத்தை பாருங்க… ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே விழவில்லை.. எங்கே போகுது பாருங்க…

    இயற்கையை மிஞ்சிய சக்தியும், அதிசயமும் எதுவுமே இல்லை என்பார்கள். இயற்கைதான் எல்லாவற்றைவிடவும் முன்னோடி. என்ன தான் நாம் காலப்போக்கில் அனைவரும் வியக்கும்வண்ணம் பல கட்டிடங்களையும், கட்டுமானங்களையும் எழுப்பினாலும் இயற்கையின் அதிசயம் காணக்கிடைக்காதது.

  அப்படித்தான் இங்கேயும் ஒரு அதிசயம் நடந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. சுசந்தா நந்தா என்னும் வனத்துறை அதிகாரிதான் இதை வீடியோவாக எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே மலைப்பகுதிகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன அருவிகள் தோன்றி அவை ஆர்ப்பரித்தும் கொட்டுவது வழக்கம் தான். இங்கேயும் அப்படித்தான் ஒரு மலையில் அருவியாகத் தண்ணீர் கொட்டுகின்றது.

  ஆனால் மேலே இருந்து கொட்டும் தண்ணீர் ஒருசொட்டுக்கூட கீழே செல்லவில்லை. மாறாக கீழே இருந்து, மேல் நோக்கி வீசும் காற்றினால் அந்தத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டினாலும் கீழே விழாமல் ஆவியாகி மேலே செல்கின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடிக்கடி நடக்கும் இந்த அதிசயம் நம் கண்களுக்கே விருந்தாக உள்ளது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.