இந்த குட்டிப்பையன் சொந்தமாக தயாரிச்ச வண்டியைப் பாருங்க… விஞ்ஞானியையே மிஞ்சிடுவான் போலியே..என்ன திறமை பாருங்க..!

                     என்ன தான் பட்டப்படிப்பெல்லாம் படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், சில நேரங்களில் பாமர மக்களின் விஞ்ஞான அறிவில் அவர்களே கூட சொக்கிப் போவார்கள். அப்படியான ஒரு  வில்லேஜ்விஞ்ஞானியின் சூப்பர், டூப்பர் கண்டுபிடிப்பு செம வைரலாகி வருகிறது. இத்தனைக்கு இந்த வில்லேஜ் விஞ்ஞானிக்கு பெரிய வயதெல்லாம் இல்லை. ஒரு பொடியன் என்பதுதான் இதில் பெரிய ஆச்சர்யம்! 

  அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார்கள் என்கிறீர்களா? முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு சைக்கிள் இருக்கும். நம்மவர்களும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிவருவார்கள்.சைக்கிள் ஓட்டிய காலத்தில் நம் உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று சைக்கிள் ஓட்டுவதே இல்லாமல் போய்விட்டது. இன்னொன்று, பலரும் இன்று வேகமாக இயங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். அப்படி வேகமாக இயங்க வேண்டி இருப்பதாலேயே ஸ்கூட்டர், கார் என மாற வேண்டி உள்ளது. இதனால் இன்று வீட்டில் சைக்கிள் இருக்கும் வீடுகளும் குறைந்துவிட்டது.

  விதியில் நின்று சைக்கிள் ஓட்டும் குழந்தைகள் குறைந்துவிட்ட நிலையில் செல்போனில் கேம்ஸ் விளையாடுவோர் அதிகரித்துவிட்டனர். இப்படியான சூழலில் இங்கே ஒரு பொடியன் இருக்கிறார். அவர் பழைய சைக்கிளின் டயரையெல்லாம் வீலோடு எடுத்துவந்து கட்டி, அதன் மேல் ஆங்காங்கே மரப்பலகையைப் போட்டு செம க்யூட்டாக அவனே ஒரு வண்டியைச் செய்துள்ளான். காலால் தள்ளிக்கொண்டே செம கெத்தாக அந்த வண்டியில் உட்கார்ந்து செல்கிறான். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

 

View this post on Instagram

 

A post shared by Sabarish Sabarish (@sabarish461)