ட்ரைவர் வேலையும் அவ்வளவு சாதாரணம் ஒன்றும் இல்லை.. இந்த டிரைவர் சாமர்த்தியத்தைப் பார்த்தால் சிலிர்த்திடுவீங்க…

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிற்று மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். 

        சாலை விபத்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.இங்கே ஒரு விபத்து தவிர்ப்புக் காட்சி  சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

பொதுவாகவே நேபாளத்தில் சாலைகள் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அங்கு மலைப் பகுதிகளும் அதிகம். ஏற்றமும், இறக்கமும் நிறைந்த சாலைகளாகவே இதனால் இங்கு காணப்படும். இந்த நேபாளத்தில் மலைப்பாதை ஒன்றில் சுற்றுலா வேன் ஒன்றை டிரைவர் ஓட்டிச் சென்றார். அப்போது ஒரு இடத்தில் வேன் செல்லும் அளவுக்கு சாலை இல்லை. ஆனாலும் மனம் தளராத டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு, அதில் விபத்து ஏற்படாமல் நிறுத்துகிறார். பேருந்தை அங்கிருந்து மூவ் செய்ய முடியாவிட்டாலும் பெரிய விபத்தில் இருந்து டிரைவர் பாதுகாத்துவிட்டார்.

  இதைவிட பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அந்தப் பேருந்தில் பயணிகள் இருக்கிறார்கள் என்பதுதான். பஸ்ஸை அவர் தட்டுத்தடுமாறி கொண்டுவரும் வரை பஸ்ஸூக்குள் இருந்து பயணிகளையும் அவர் இறக்கவில்லை. கடைசியில் உள்ளே இருந்து பயணிகள் இறங்க அனைவருக்கும் மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.