ஸ்பிரிங்கால் செய்யப்பட்ட உடம்போ… ப்ரொபஷனல் டான்சர்களையே மிஞ்சிடும் போலீஸ் அதிகராயின் டான்ஸ்..!


இந்த உலகத்தில் இசையை ரசிக தெரியாதவர்களும் இல்லை நடனம் ஆடத்தெரியாதவர்களும் இல்லை. இசையை கேட்டால் நமக்கு தெரிந்த ஸ்டெப்பையாவது போடுவோம். சிலர் பிறக்கும் போதே பார்ன் வித் எ சில்வர் ஸ்பூன் என்பது போல் பிறக்கும் போதே பாடகர்களாகவோ, நடன புயலாகவோ , இசை புயலாகவோ பிறக்கின்றனர். ஆம், நடனத்திற்கு மைக்கேல் ஜாக்சன் உலக அளவில் பேரும், புகழையும் கொண்டவர்.

இந்திய அளவில் பிரபு தேவா, ஒரு முறை ரசிகர்களில் ஒருவர் இவரிடம் நடனத்தில் தன்னை விட ஆடும் நபர்களின் பெயர்களை கூறுமாறு கேட்டு விட்டு அவருடன் போட்டி வைத்தால் யார் ஜெய்ப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை தான் சிறப்பாக ஆடுவதாகும் தானே ஜெயிப்பேன் என்று அவருடைய பாணியில் பதில் கூறியிருப்பார். அதை பார்க்கும் போது நடனத்தில் அவர் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருப்பார் என்பதும் அதன் மேல் அவர் கொண்ட நம்பிக்கையும் வெளிப்படும்.

என்ன தான் நாம் சிறு வயதில் நமக்கென்று சில தனிப்பட்ட திறமைகள் இருந்தாலும் அதனை நாம் மறந்து கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் என்று இப்போதைய சிஸ்டம் இருப்பதால் அதனை கைவிடும் நிலைமை உள்ளது. சரி…. நாம் படித்து பெரிய பதவிகளில் அங்கம் வகித்தாலும் நம் விருப்பத்தையும் நமக்கிருக்கும் திறமையும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வெளிப்படும். அது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். இவருக்குள் இப்படி ஒரு திறமையை என்று…… அது போல் காவல் பணியில் சேர்ந்து பணிபுரியும் அதிகாரி சந்தர்ப்பம் கிடைத்தவுடன் ஸ்பிரிங்க் போல் உடம்பை வளைத்து நடனம் ஆடியது உடன் பணிபுரியும் காவலர்களை ஆச்சர்யத்திற்குள்ளாகியது. உங்களுக்காகக் காவலரின் ராப் டான்ஸ் இதோ…..